அழுக்கு ஆடைகளை பகிரங்கமாக துவைக்க வேண்டாம் - ஷான் விஜேலால் டி சில்வா
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், தமது அழுக்கு ஆடைகளை பகிரங்கமாக துவைக்க வேண்டாம் எனவும் ஆளும் கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா (Shaun Wijelal De Silva) தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் மேலும் வெறுப்படைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது பொய்யல்ல. அதனை தற்போது முழு நாடும் அறிந்துள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்க கட்சியின் தலைவர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமானது.
இந்த பிரச்சினை அதிகரிக்க இடமளித்துள்ளமை தொடர்பில் கூட்டணி கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது அதிருப்தியை தெரிவித்துக்கொள்வதாகவும் விஜேலால் டி சில்வா கூறியுள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
