தென்கிழக்கு அரேபிய கடலுக்குள் செல்ல வேண்டாம்! - வானிலை மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு அரேபியக் கடல் பகுதிக்கு நாளை 14 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம் இதற்கான அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. லச்த்தீவை அண்டியுள்ள தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருக்கிறது.
இது அடுத்த 48 மணித்தியாலத்தில் வலுவடையக் கூடும். இதனை அடுத்து எதிர் வரும் மே 18 ஆம் திகதி மாலை இது வடமேற்கு நோக்கி இந்தியாவின் குஜராத் மற்றும் பாக்கிஸ்தான் கடற்கறையை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது.
எனவே இந்த கடல் பகுதியில் தொழில்களில் ஈடுபடுவோர் விரைவில் கரைக்கு திரும்ப அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான மன்னார் கொழும்பு மற்றும் காலி வழியாக ஆழமான மற்றும் ஆழமற்ற கடல்களில் செயற்படும் போது கவனமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதர்காலத்தில் வழங்கப்படும் முன்னறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டிருக்கின்றன.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
