பூனைகளைப் புலிகளாக்காதீர்கள் சட்டத்தரணி சுகாஸ் எச்சரிக்கை
மட்டக்களப்பு - கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 18 ம் திகதி 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுகாஸ் தலைமையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வழக்கானது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடையாதெனவும்,உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இறந்த உயிர்களை நினைவு கூருவது இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட L.L.R.C சட்டத்தின் படி உரிமையுள்ளதெனவும்,தற்போது பூனைகளை எல்லாம் அரசு புலிகளாக்குகின்றதெனவும் ,இதற்கான விளைவை அரசு சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மட்டக்களப்பு - கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்த குற்றச்சாட்டில் குருசுமுத்து வி. லவக்குமார் மற்றும் அவரின் தந்தையை கல்குடா பொலிஸார் கடந்த 18 ம் திகதி கைது செய்திருந்தனர்.
குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.





