உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் கோவிட் தடுப்பூசிகள் - சுகாதார அமைச்சு மறுப்பு
கோவிட் வைரஸ் தடுப்பூசிகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன என்ற செய்தியை இலங்கையின் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது .
அத்துடன் இலங்கையில் விற்பனை செய்யப்படும் எந்த கோவிட் வைரஸ் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்ல என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசிகள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக சமூகத்தின் உதவியுடன் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.
எனினும் பொய்யான இந்த குற்றச்சாட்டுக்களால் தடுப்பூசிகள் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சர் அல்லது அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட தடுப்பூசி மோசடி எதுவும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சு வலியுறுத்தியது.
இந்தநிலையில் எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பணத்துக்காக பெற்றுக்கொள்ள
வேண்டாம் என்று சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.