பாலர் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியில்லை என அறிவிப்பு
பாலர் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என சிறுவர் அபிவிருத்தி குறித்த தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நயனா டி சில்வா அறிவித்துள்ளார்.
பாலர் பாடசாலைகளை கலை நிகழ்ச்சிகளுக்காக ஆயத்தப்படுத்த வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் அதற்காக ஆயத்தங்களை செய்தல் என்பனவற்றின் மூலம் கோவிட் பரவக்கூடும்.
பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறார்கள் முகக் கவசம் அணியாமையானது பிரச்சினையாக உருவாகியுள்ளது.
எனவே அவர்களுக்கு உரிய முறையில் முகக் கவசங்களை அணிவிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
