விருந்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம்! பொது மக்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை
புத்தாண்டினை முன்னிட்டு கடந்த வருடம் போன்று எந்தவொரு விருந்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என சுகாதார பிரிவு, பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மேலும் சில கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையானது கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு நிலைமையாகும்.
இன்றும் நாளையும் மக்கள் ஒன்று கூடி விருந்து நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது போன்ற விடயத்தை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam