வடக்கு - கிழக்கில் படை முகாம்களை அப்புறப்படுத்த வேண்டாம் - மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பௌத்தர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பௌத்த தலங்களை போர் நடைபெற்ற காலத்தில் இருந்து இதுவரையும் பாதுகாத்து பராமரித்து வருவது பாதுகாப்பு படையினர் எனவும் அவர்களை இந்த வழிபாட்டு தலங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டாம் என மாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் மாநாயக்க தேரர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இந்த விகாரைகளை உயிர் தியாகம் செய்து பாதுகாத்த பௌத்த பிக்குகள் அந்த பிரதேசங்களுக்கு மிகப் பெரிய பொது சேவை செய்துள்ளனர். வறிய மக்கள் பெரும்பாலும் விகாரைகளால் போஷிக்கப்பட்டனர்.
இதற்கு பின்பலத்தை பாதுகாப்பு தரப்பினரே பெற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்கள் அவற்றின் பாதுகாப்புக்காக அப்படி இருப்பது நல்லது எனவும் மாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam