அரசு கவிழும் என்று பகல் கனவு காணாதீர்- சஜித்துக்கு பீரிஸ் பதிலடி
நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
'எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்' என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு குறுக்கு வழியால் நிறுவப்பட்ட அரசு அல்ல. நாட்டு மக்களின் ஆணையுடன் - மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறுவப்பட்ட அரசாகும்.
எனவே, அரசிலுள்ளவர்கள் மக்களின் ஆணையை மீறிச் செயற்பட மாட்டார்கள். இந்த அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது.
அரசைப் பிளவடையச் செய்வது எதிரணியினரின் நீண்ட நாள் சதித் திட்டம். இதற்கு
அரசிலுள்ள பங்காளிக் கட்சியினர் எவரும் துணைபோகமாட்டார்கள்" - என்றார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
