மதவாதத்தை தூண்டி மக்களை குழப்பாதீர்! யாழ்.நாக விகாரை விகாராதிபதி வலியுறுத்து

Srilanka Jaffna Sri Vimala Thera
By Rakesh Oct 02, 2021 04:46 PM GMT
Report

அரசியல் தேவைகளுக்காக, அரசியல் இலாபங்களுக்காக மதவாதங்களைத் தூண்டி மக்களைக் குழப்பி மதங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் செயற்பாட்டை உடன் நிறுத்துங்கள்  என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் (Sri Vimala Thera) தெரிவித்துள்ளார்.

யாழ். ஆரியகுளம் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரியகுளம் அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்ற செய்தியையும் பார்த்தேன். அந்தச் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாக விகாரைக்கு அண்மையில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றேன்.

குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கபடவில்லை. இது ஒரு புனித பூமி. இந்தக் குளத்தில் சுற்றுலா ஹோட்டலை குளத்தின் நடுவில் அமைப்பதை நிறுத்தி இந்து மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவாறு ஒரு நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், குறித்த பத்திரிகையில் நாம் புத்தர் சிலை அமைக்கப் போகின்றோம் எனச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

நாங்கள் அவ்வாறு ஒன்றும் செய்வதற்கு எண்ணவில்லை. ஒரு தியான மண்டபமாக மாற்றுவதற்குத்தான் யோசித்துள்ளோம். புனித பிரதேசம் என்பதால் குளத்தின் நடுவில் ஒரு தியான மண்டபத்தை அமைத்தால் அது அனைத்து மதத்தினருக்கும் உதவியாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடு.

இந்து மதமும் பௌத்த மதமும் சர்வமத குழுவாக இணைந்து யாழில் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றோம். விசேடமாக ஆரியகுளம் பகுதியில் அண்மையில் சைவ ஆலயம் உள்ளது. அதேபோல் அண்மையில் பௌத்த விகாரையும் உள்ளது.

இந்து மக்கள், வேறு மத மக்கள் என்று பார்க்காது அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம். நாக விகாரை நுழைவாயிலில் பார்த்தால் தெரியும். இந்துமத தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் இடம்பெறுகின்றன.

இந்து மதத்தில் முழுமுதல் கடவுளின் சிலையும் வைக்கப்பட்டு பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது. நாம் கூறுவது என்னவென்றால் இந்தப் பகுதியை ஒரு புனித பிரதேசமாக மாற்ற வேண்டும். விகாரையுடன் சம்பந்தப்பட்ட குளம் என்பதால் எம்முடனும் கலந்தாலோசித்திருக்கலாம்.

ஆனால், அவ்வாறு இடம்பெறவில்லை. யாழ். மாநகர மேயரை நேரில் கண்டபோது ஏன் குள அபிவிருத்தி தொடர்பாக எம்முடன் கலந்துரையாடவில்லை எனக் கேட்டேன். தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக தாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை என்று அவர் கூறினார்.

எனவே, நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். சுற்றுலா மையமாக மாற்றினால் இது ஒரு புனித பிரதேசமாக இருக்காது. எனவே, இந்து - பௌத்த நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு நான் மேயரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.

நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம். நேற்றுக்கூட அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டோம். எனவே, யாழ். மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.

சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக மதவாதங்களைத் தூண்டி மக்களைக் குழப்பி விட யோசிக்கின்றார்கள். மக்களைத் தூண்டி விடுகின்றார்கள். எனவே, இதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ முயற்சிக்கின்றோம். எனவே, ஒரு சிலரின் அரசியல் இலாபங்களுக்காக மதங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US