அரசாங்கம் - மைத்திரி இடையிலான பிரச்சினையை சபைக்குள் கொண்டு வர வேண்டாம்! சபாநாயகரிடம் முறைப்பாடு
அரசாங்கம் மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான மோதலை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதால், நாடாளுன்றத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர், சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினையை தினமும் நாடாளுமன்றத்தில் வாதிடுவதால், அன்றைய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலின்படி வேலைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது என அவர் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், அரசங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினையை வெளியில் தீர்த்துக்கொள்ளுமாறும், அதனை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டாம் எனவும் சமிந்த விஜேசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதால், அதனை தீர்க்க சபாநாயகர் தலையிட நேரிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சபாநாயகர், விசேட உரை ஒன்றை நிகழ்த்த ராஜாங்க அமைச்சர் நேரத்தை கேட்டதால், அதற்கு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri