கிண்ணியாவில் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகள் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கோவிட் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்தி உண்மையல்ல என்றும், தொடர்ச்சியாகக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும், அத்தியாவசியமான சேவைகளுக்காக மாத்திரமே கடைகள் திறக்கப்படும் என்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
வர்த்தக சங்கத்தினர் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்த போதிலும் இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு கோரிக்கை அனுப்பிய போதிலும் இதுவரைக்கும் எந்த விதமான பதிலும் கிடைக்காத நிலையில், கடைகளை மூடும் முடிவில் மாற்றம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதன் காரணத்தினால்
பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மேலும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
