நாட்டை சீரழிக்கும் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜனசெத பெரமுன(Photos)
எங்கள் நாட்டை சீரழிக்கும் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனசெத பெரமுன கட்சித் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன ஹிமி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனக்குடா பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற போது பிக்குவை ஊழியர்கள் மறைத்து பிரதான கதவினை மூடி அங்கு செல்லவிடாது தடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதனை அடுத்து அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் நாட்டுடைய எண்ணை வளங்களை மற்றும் எண்ணெய் தாங்கிகளைப் பாதுகாக்க முடியாத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
நான் கேட்க விரும்புகின்றேன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் எண்ணைத் தாங்கி எங்கே?
நல்லாட்சி அரசாங்கம் இருக்கின்றபோது நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாகக் குற்றங்களைச் சுமத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கே? எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விமர்சித்து மக்களுடைய வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்கள் இனி அந்த தீர்மானம் முடிந்து போய்விட்டது.
நாட்டில் மோடையர்கள் இல்லை எனவும் மக்கள் இனி வரும் காலங்களில் சிறந்த பாடத்தைப்
புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam