வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களை ஹோட்டல்களில் தங்க வைக்க வேண்டாம்
வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எவரையும் ஹோட்டல்களில் தங்க வைக்க வேண்டாம் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஹோட்டல்கள், விடுதிகளில் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு உத்தரவிற்கு அமைய இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதே மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண எல்லைப் பகுதிகளில் குறிப்பாக மாகாணங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் நோக்கில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
பயணக்கட்டுப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை கண்காணிப்பதற்கு காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
