பூஸ்டர் தடுப்பூசிகள் இரத்த உறைவை ஏற்படுத்துமா? விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்
பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசியால் உலகில் எந்த நாட்டிலும் இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பைசர் தடுப்பூசி தற்போது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரத்த உறைவு எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாகச் செய்திகள் வந்ததாகவும், ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.