யாழில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்
யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனது ஆறு நண்பர்களுடன் மது அருந்திய நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் கிணற்றுக்குள் தவறி விழவே அவரை காப்பாற்ற மற்றொருவர் கிணற்றில் குதித்திருக்கிறார்.
இதன்போது இருவரும் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் நேற்றைய தினம் (24.10.2022) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அதில் ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற மற்றுமொரு இளைஞரும் கிணற்றுக்குள் குதித்த நிலையில் இருவரும் கிணற்றுத் தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து அயல்வர்கள் குறித்த இரு இளைஞர்களையும் கிணற்றில் இருந்து மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு வரும் முன்பே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
