மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவோம்: - போப் பிரான்சிஸ் தீபாவளி வாழ்த்து
மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துகிறது என்று போப் பிரான்சிஸ் (Pope Francis) தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தற்போதைய பெருந்தொற்றுநோய், அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிகள் ஆகியவற்றில் இருந்து எழுகிற கவலை மற்றும் நிச்சயமற்ற நிலையில்கூட, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, எதிர்காலத்துக்கான நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை, வீடுகளை, சமூகங்களை ஒளிரச்செய்யுங்கள்.
பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள், மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்துள்ளது. பலரும் வேலை இழந்து, விரக்தி உணர்வில் உள்ளனர்.
இந்த சவாலான தருணங்களில் நாம் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும்.
மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது, சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதிப்படுத்துகிறது.” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri