அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு விடுமுறை! மசோதா அறிமுகம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம்
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அதனை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவும் இந்த சட்டம் வாய்ப்பாக இருக்கும்' என இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய கிரேஸ் மெங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கும் சட்டத்தை சமீபத்தில் இயற்றிய நிலையில் தற்போது இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.