ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் தொடர்பில் ரணிலிடம் பிரதேச செயலர்கள் முறைப்பாடு
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) முறைப்பாடு செய்துள்ளன.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு வலியுறுத்தி, கடந்த மே 17ஆம் திகதி கண்டி மாவட்ட பிரதேச செயலாளருக்கு தொலைபேசியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியதாக அந்த சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான அச்சுறுத்தல்
மற்றுமொரு முறைப்பாட்டில், வாழைத்தோட்டத்திற்காக பாடசாலை காணியை விடுவிக்காததற்காக அனுராதபுரம் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவருக்கு ஜூன் 11ஆம் திகதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரொருவரை கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 1,100 பணியாளர்கள் இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இரண்டு தொலைபேசிகளைப் பயன்படுத்தினால், அது 2,200 அழைப்புகள். எனவே, அத்தகைய அழைப்புகளை கண்காணிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பொது அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்களை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
அத்துடன், செயலகத்தில் இருந்து அதிகாரிகள் திட்டினால், பிரதேச செயலாளர்கள் திருப்பி திட்ட வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |