பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video)

Sri Lanka Police Vavuniya Ranil Wickremesinghe Human Right Day Government Employee
By Thileepan May 22, 2023 06:29 AM GMT
Report

வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டால் தன்னை பொலிஸ் புலனாய்வாளர் என மக்கள் எண்ணுவதாக சமூக செயற்பாட்டாளரான சூரியகுமார் கிருபன் குற்றம்சாட்டியுள்ளார். 

அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிஸார் என கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (22.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

vavuniya

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் 219 பேருக்கான காணி திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தால் அறிவித்து இருந்தார்கள்.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் தெரியப்படுத்துமாறு கோரியிருந்தனர்.


அதன்போது நான் 219 பேரின் விபரம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தும் போது இதில் ஊழல் நடைபெற்றுள்ளது, காணி உள்ள பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகவும் தகவல் கோரி விண்ணப்பித்து இருந்தேன்.

rti

அதற்கு எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் நேரடியாக தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவ்வாறான விபரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதுடன் நேர்முகத் தேர்வு குறித்து எந்த விபரங்களும் தரப்படவில்லை.

பிரதமர் செயலகம்

இதனால் கடிதம் ஒன்று எழுதி அதனை பிரதேச செயலாளருக்கு அனுப்பி அதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன்.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

இதன்பின் பிரதமர் செயலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. இது தொடர்பில் ஆராய்வதாகவும் இது தொடர்பான பதில் பிரதேச செயலகத்தால் தமக்கு வழங்கும் வேளை, தங்களுக்கும் அது அனுப்பி வைக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் உத்தியோகத்தர்

அதற்கான பதிலை பிரதேச செயலாளர், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அதன் பிரதியை எனக்கு அனுப்பியுள்ளார்.

அதில் நான் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களும், என்னையும், எனது குடும்பத்தாரைப் பற்றியும் அவதூறுகளையும் எழுதியிருந்தார்.

அதில் நான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

பொலிஸ் புலனாய்வாளர்

அன்றிலிருந்து எனக்கு ஒரே பிரச்சினை. நான் தனியார் துறையில் வேலை செய்கிறேன்.

பிரதேச செயலகத்தால் நான் பொலிஸார் என குறிப்பிட்டுள்ளமையால் நான் செல்லும் இடங்களில் என்னை பொலிஸ் புலனாய்வாளர் என சந்தேகிக்கின்றார்கள்.

பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியகுமார் கிருபனின் குற்றச்சாட்டு (video) | Divisional Secretariat Allegation Social Activist

என்னால் பொது மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கும் முறையிட்டுள்ளேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருவதுடன், ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில் முறைகேடற்ற வகையில் காணியை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US