யாழில் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நடாத்தப்பட்ட இறை இசை கச்சேரி
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் இறை இசை கச்சேரி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இசை கச்சேரியானது, நேற்றையதினம் (15.03.2024) கட்புலக் கலைகள் பீட 4ஆம் வருட மாணவி சிவநாதன் சிவஸ்ரிகாயாவினால் நடாத்தப்பட்டுள்ளது.
இதில் வயலின் இசையினை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமனும் மிருதங்க இசையை கலாவித்தகர் க. சிவகுமாரும் வழங்கியிருந்தனர்.
சத்துணவுப் பொதிகள்
அத்துடன், அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளடங்களான 26 குடும்பங்களுக்கு ரூபா 156,000 பெறுமதியான பங்குனி மாதத்திற்கான சத்துணவுப் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சந்நிதியான் சைவ கலாச்சார பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |