இலங்கையில் உள்ள 416 தொழிற்சாலைகள் பாதிப்பு!
இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலினால் 416 உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட மொத்த சேதத்தில் 25 சதவீதத்தை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சு முன்மொழிந்துள்ளது.
இந்த தொழில்களை மீளக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கும் வகையில், அமைச்சு ரூ.3 பில்லியன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத மானியமாக ஒதுக்கியுள்ளது.இந்த நிதியை விடுவிக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோரிக்கை
தொழிற்சாலை உரிமையாளர்கள் டிசம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர், 071 266 6660 என்ற அவசர இலக்கத்தின் ஊடாகச் சேதங்களைப் முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை , கேகாலை,குருநாகல், மாத்தறை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் பதிவாகியுள்ளன.
பல தொழில் அதிபர்கள், விரைவான மீட்புக்கு வசதியாக நீர், மின்சாரம் மற்றும் வீதி உட்கட்டமைப்பை மீளமைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri