டித்வா புயலால் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த புயலால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தைத் ஆரம்பிக்கத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam