அமெரிக்க மொன்டானா தேசிய பாதுகாப்பு படையணி இலங்கை வருகை
மொன்டானா தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் குழு டித்வாவுக்கு பின்னரான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் பல அரச நிறுவனங்களின் ஊழியர்களுடன் இணைந்து டித்வா சூறாவளிக்கு பின்னர் சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
திருகோணமலை வைத்திசாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் பிக்குகள்:சர்ச்சையை கிளப்பும் சிவில் அமைப்புகள்
மேற்கொண்டுள்ள நடவடிக்கை
இந்த விஜயம் மனிதாபிமான உதவிக்கான அமெரிக்காவின் கூட்டாண்மை அடிப்படையிலான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவில் இயற்கை பேரிடர்களுக்கு பதிலளிப்பதில் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மொன்டானா தேசிய பாதுகாப்பு படையணி குழு கொழும்பு, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்றுள்ளது.

இந்த ஒத்துழைப்பு நவம்பர் 2025 இல் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் மொன்டானா தேசிய பாதுகாப்பு படையணிக்கிடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அடிப்படையாகக் கொண்டதாகும்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan