சட்டத்தின் எல்லையை மீறுவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை!
இந்த நாட்டில் காணப்படும் சட்டத்தின் எல்லையை யாரும் மீற முடியாது.அந்த எல்லைக்கு கீழேயே அனைவரும் இருக்க வேண்டும்.அந்த எல்லையை தாண்டி எதுவும் செய்ய முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் டித்வா சூறாவளியில் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
சட்டத்தின் எல்லைக்கு மேல் யாரும் இல்லை.
நாங்கள் அதற்கான மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளோம்.இவை சிலருக்கு பிரச்சினையாக உள்ளது.ஆனால் நேர்மையானவர்களுக்கு அதில் எவ்வித பாதிப்பும் இல்லை.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு 330 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான ஒரு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருந்தும் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோருகின்றனர்.
2027 ஆம் ஆண்டு மூன்றாவது சம்பள அதிகரிப்பை வழங்கிய பின்னரே எந்த கொடுப்பனவையும் அதிகரிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படும்.
அதுவும் திரைசேறியால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா என அவதானிக்க வேண்டும்.அதனால் யார் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஒன்றும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.




வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam