இஸ்ரேலிய தொழில் வாய்ப்பு:வெளிவந்துள்ள மகிழ்ச்சியான செய்தி
இஸ்ரேலிய நாட்டில் தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பிப்பதற்கு அதிகபட்சமாக இரு வாய்ப்புகளே முன்னர் வழங்கப்பட்டது.
அது 3 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, தொழிலுக்காக விண்ணப்பிப்போர் 3 முறை வரை விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறை
அதன்படி, இஸ்ரேலில் பல தொழில் வாய்ப்புகளுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பதற்காக வலைத்தளம் இன்று (06.01.2026) திறக்கப்பட்டுள்ளது என்றும் பணியகம் தெரிவிக்கிறது.
பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.slbfe.lk மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதன்படி, தொழில் தேடுவோர் இம்முறை 3 முறை விண்ணப்பிக்க முடியும்.

கட்டுமானத் தொழிற்றுறை. கம்பி வேலைத்தளம், பிளாஸ்டரிங், ஷட்டரிங், தச்சு, பீங்கான் வேலை, புதுப்பித்தல், பொதுவான பணிகள் போன்ற தொழில்கள் காணப்படுகின்றன.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam