காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம்
உலக வங்கியின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (01) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ். நவீன்திரதாஸ் மற்றும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நிபுணர் எம்.எஸ்.ஏ. காலீஸ் ஆகியோரால் இத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ, கோமரன்கடவல, பதவி ஸ்ரீபுர மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண காலநிலை
மேலும் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அதிகாரிகள், துறைசார்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri