72 வயதில் சாதனை படைத்த பெண்: கௌரவித்த மாவட்ட செயலகம்
பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த அகிலத்திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார்.
இவ்வாறு தடகள போட்டியில் உலகளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு மாவட்ட பெண்மணியினை கௌரவப்படுத்தும் நிகழ்வு இன்று(24) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அகிலத்திருநாயகிக்கு மலர்மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு பண்டரவன்னியன் மாநாட்டு
மண்டபத்தில் கௌரவ நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது அகிலத்திருநாயகி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் நினைவு படமும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் உள்ளிட்ட மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள் விளையாட்டு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவர் 500 மீற்றர் நெடுந்தூர ஓட்டம், 5,000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய போட்டிகளில் முதலிடம்பெற்று தங்கப் பதக்கங்களையும், 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 5,000 மீற்றர் நெடுந்தூர ஓட்டத்தில் நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



