தூய அரசியலுக்காக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தூய அரசியலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், இன்று (07.10.2024) மட்டக்களப்பு தனியார் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப்பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல் சம்பந்தமான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை அரசியல் பண்புகள்
அத்துடன், தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |