கிளிநொச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்
கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைகளை வெளிப்படுத்தல் மற்றும் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
குறித்த போட்டிகள் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (26.03.2024) இடம்பெற்றுள்ளன.
விளையாட்டுப் போட்டிகள்
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில் வடமாகாண விளையாட்டுக்கள் கட்டடதொகுதி மைதானத்தில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக தொழிற்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.