எரிபொருளுக்கு முற்பணம் கோரும் விநியோகஸ்தர்கள்
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் முற்பணத்தை செலுத்துமாறு கோர ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இதுவரை எரிபொருளை விநியோகித்த பின்னர் பணத்தை வழங்கும் வங்கி கடன் பத்திரத்தின் அடிப்படையில் விநியோகித்து வந்த விநியோகஸ்தர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக முற்பணத்தை செலுத்துமாறு கோரி வருகின்றனர்.
இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 400 முதல் 500 மில்லியன் டொலர் வரை தேவைப்படுகிறது.
இதனிடையே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான கச்சாய் எண்ணெயை ஓமான் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த ஓமான் நிறுவனம் விலை மனுவை முன்வைத்த நிறுவனம் அல்ல என தெரியவருகிறது.
எனினும் ஆறு மாத கால கடன் அடிப்படையில் இந்த விலை மனு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டணத்தை செலுத்துவது நாள் கணக்கில் தாமதமாகி வருவதால், விநியோகஸ்தர்கள் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam