யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்(Photo)
எரிபொருள் அட்டை அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு இன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசனின் அறிவுறுத்தலுக்கமைய, கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்

குறித்த எரிபொருள் அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் அட்டை

இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பித்து எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்ட பின்னரே தமக்கான மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| ஒரு மாதத்திற்குப் பின் புத்தள எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மண்ணெண்ணெய் (Photos) |
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam