மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயிர்கள் வழங்கி வைப்பு
மன்னார் (Mannar) கறிற்றாஸ் வாழ்வுதயத்தினால் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு நீண்ட காலப் பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (18.06.2024) இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பேசாலை, வேப்பங்குளம் மற்றும் கரம்பைக்குளம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து 60 பயனாளிகள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறித்த நீண்ட காலப் பயிர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அருட்தந்தை கிறிஸ்து நாயகம்
கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் கலந்துகொண்டார்.
இந்தத் திட்டமானது ஜேர்மன் நாட்டில் உள்ள மிசிரியோ நிறுவனத்தின் நிதியுதவியுடன் கொழும்பு தேசிய நிலையத்தின் ஊடாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |