அரசு ஊழியர்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகம்(Photos)
யாழில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவால் அதிகரிக்குமாறும், பதவி
உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்
புதிய சேவைகள் யாப்பொன்றைத் தயாரிக்குமாறும், பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றைத் தயாரிக்குமாறும், சகல அபிவிருத்தி
உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில்
இணைக்குமாறும், 2016இன் பின்பு அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட
ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரி இந்த துண்டுப்பிரசுர விநியோகம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.



குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri