மக்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தி
மக்களின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மறந்து செயற்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அண்மைய சில தினங்களாக மக்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாகவும், அதிருப்தி அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடங்களுக்குச் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் போதும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தொழில் இடங்களில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியதன் காரணமாகவே பாரிய பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும்,இதே நிலைக்கு மீண்டும் நாடு சென்றுவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
