ஜனாதிபதியின் புதிய நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவை மூப்புப் பட்டியலில் உள்ள சிலர் இந்த விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதாக கூறியே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பல இளநிலை அதிகாரிகள் இதன்போது அமைச்சுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீளாய்வின் பின் நியமனம்
அவர்களில் பல்வேறு அமைச்சகங்களின் கூடுதல் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
எனினும் அமைச்சின் செயலாளரை நியமிப்பது ஜனாதிபதியின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், செயற்பாடுகளை மீளாய்வு செய்ததன் பின்னரே பல இளநிலை அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
