இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரை
இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.
அட்மிரல் ஒப் தி பீல்ட் வசந்த கரன்னாகொட, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, ரியர் அட்மிரால் டி.கே.பி. தசாநாயக்க, கேணல்களான ஷம்மி குமாரரட்ன, ப்ரோபோதய சிறிவர்தன, எரந்த பீரிஸ், சீவலி புலவத்த, கெப்டன் சுமித் ரணசிங்க, கமாண்டர்களான அனில் மாபா, தயானந்த, பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்ட 25 இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இராணுவத்தினரை குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அறிவித்து விடுதலை செய்ய வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
