காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியான காத்தான்குடியில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆறு பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பொலிஸ் நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காத்தான்குடியில் அண்மையில் 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் வழிகாட்டலில் இன்றைய தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையம் முழுமையாக கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam