நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தெங்கு பயிர்ச் செய்கை
நாட்டில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் புத்தளம்(Puttalam) மாவட்டத்தில் ஒருவகை நோயினால் தெங்கு பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிற ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக இந்த நோய் ஏற்படுவதால் தமது செய்கை பாதித்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெங்கு செய்கை பாதிப்பு
இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |