அறுவடைக்குத் தயாரான கடலைச் செய்கையில் நோய் தாக்கம்! விவசாயிகள் கவலை
கிண்ணியா, மனியரசன் குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட கச்சான் பயிர்ச்செய்கை, தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றது.
எனினும், ஒரு சில இடங்களில் கச்சான் பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
மனியரசன் குளம் பகுதியில் அதிகளவான விவசாயிகள் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நோய் தாக்கம்
பெரும் உழைப்பையும் முதலீட்டையும் செலவிட்டுப் பயிரிடப்பட்ட இந்தக் கச்சான் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், நோய் தாக்கம் காரணமாகச் செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில், நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிட்டனர்.
தடுப்பு நடவடிக்கை
இந்தத் திடீர் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அறுவடையைப் பாதுகாக்கவும் உரிய விவசாயத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும், அவசியமான உதவிகளையும் வழங்குவதன் மூலம் தாம் பெரும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம் எனவும் அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam