திருகோணமலையில் மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்
திருகோணமலையில், மாகாண பொது சேவை மற்றும் மத்திய அரசின் நிறுவனங்கள் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஒன்றினைந்து மற்றும் கூட்டுறவுடன் பணியாற்றுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(29.01.2025) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
சேவைகள் தாமதப்படுத்தப்படக் கூடாது
இதன்போது, நிர்வாகத்தினை இலகுபடுத்துவதற்காக மாகாண அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடயதானங்கள் பிரித்து உருவாக்கப்பட்டுள்ளதால் வழங்கப்படும் சேவைகளை தாமதப்படுத்தவோ அல்லது சிக்கலாக்கவோ கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் ஏதேனும் சிக்கல்கள் காரணமாக சேவைகளை வழங்குவதை மட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், சேவையை திறம்பட வழங்குவதற்கு பொருத்தமான தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |