ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு: நாளை முக்கிய கலந்துரையாடல்
ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டமை தொடர்பில் நாளை (20.03.2023) கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைப்பதாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அரசாங்கம் கடந்த வௌ்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
எனினும், தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்திருந்த நிலையில், இடமாற்றச் சபையில் அங்கத்தவராக இருந்த பௌத்த பிக்கு ஒருவரும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர்
இந்நிலையில், நாளை கல்வி அமைச்சில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு தமக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிடின் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .