யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (20) மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றிமுடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு
கடவுச்சீட்டு அலுவலகம்
மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலிலும், நேரடியான களதரிசிப்பிலும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
