வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் நேற்று (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 'மாகாண விவசாயத் திணைக்களங்கள், மத்திய கமநல அபிவிருத்தித் திணைக்களம், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களுக்கு இடையில் வலுவானதொரு வலையமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
உற்பத்தித் திறன்
விவசாயத்துறையை காலத்துக்கு ஏற்றவாறு நிலைத்து நிற்கக்கூடிய, உற்பத்தித் திறன்மிக்க மற்றும் நிலையான ஒரு முயற்சியாக மாற்றுவதே எமது கூட்டு இலக்காக அமைய வேண்டும்.

நவீன நடைமுறைகள் மற்றும் புத்தாக்கத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாகவும், அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் ஊடாகவும், அடுத்த சந்ததியினரை விவசாயத்தை ஒரு கௌரவமான மற்றும் இலாபகரமான தொழிலாகத் தழுவிக்கொள்ளத் தூண்ட முடியும். இது உற்பத்தித் திறனை அதிகரிப்பதனூடாக மாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்திக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், நவீன கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் விவசாய நிலங்களை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்.
எமது விவசாயிகள் குறைந்த உற்பத்திச் செலவில் கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
இதற்குரிய தொழில்நுட்பத்தைக் களத்தில் நிற்கும் விவசாயிகளிடத்தில் கொண்டு செல்வதற்குப் பொருத்தமான தரப்பாகப் பல்கலைக்கழகம் இருக்கும் என நான் நம்புகின்றேன்” என கூறினார்.







டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri