திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்!
திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல், திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காகவே நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
நாளை மறுதினம் 31 ஆம் திகதி இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய தொழில்துறை சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் ஆகியவை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மின்கட்டண விபரங்கள்
அதன்படி, 0-30 வரையிலான வீட்டுப் பிரிவிற்கான அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவிலிருந்து 4 ரூபாவாகவும், 31-60 வரையிலான பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வீட்டுப் பிரிவிற்க்கு 20 சதவீதமும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 21 சதவீதமும், உணவகங்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறை துறைக்கு 30 சதவீதமும், பொதுத்துறைக்கு 12 சதவீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், அரசு நிறுவனங்கள் மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
