வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு குறித்து வெளியான அறிவிப்பு
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இழப்பீடு வழங்கும் பணி இன்று(29) முதல் ஆரம்பமாகும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடு, பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இதேவேளை 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வெள்ளத்தால் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam