தோட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்!ஜீவன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல்
2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் (Jeevan Thondaman) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மனித வள நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் கடந்த ஆண்டு இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை மலைகளில் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுப்படுபோது இளைப்பாற, உணவு உட்கொள்ள, கழிவறை போன்ற வசதிகளுடன் நிர்மானிக்கபடும் இளைப்பாறு கட்டிடத்தை விரைவாக நேர்த்தியாக விரைவாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஹட்டன், நுவரெலியா ,பதுளை, கண்டி, காளி, கேகாலை, இரத்திபுரி ஆகிய பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய காரியங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு கடந்த அரசாங்கதால் கட்டபட்ட வீடுகளுற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்து மக்களுக்கு கையளிக்குமாறும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைக்குமாறு அதிககாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய காரியத்தின் அதிகரிகள், சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஸ் ஈஸ்வரன் மற்றும் அமைச்சரின்
பிரத்தியோக செயலாளர் மொகமட் காதர் உட்பட பலர்கலந்துக்கொண்டனர்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri