வடகீழ் பருவமழையை எதிர்கொள்ளல் குறித்த மாவட்டச் செயலக கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் பருவ மழையினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைப்பது தொடர்பான அனர்த்த முன்னாயத்த கூட்டம் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (29.10.2026) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K.அழகக்கோன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள் மாவட்டத்திலுள்ள முப்படைகளின் உயரதிகாரிகள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள்,தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாகவும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் முன்னேற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.

ஆராயப்பட்ட விடயங்கள்
வடகீழ் பருவமழை எதிர்கொள்ளல் குறித்த மாவட்டச் செயலகக் கலந்தரையாடலின் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன:
- பங்கேற்பாளர்கள்: துறைசார் திணைக்களங்கள, முப்படையினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்டனர்.
- தயார்நிலை: அவசர நிலைகளில் முப்படையினரும் பொலிஸாரும் தேவையான உபகரணங்கள், படகுகள் மற்றும் மீட்புப் பணிகளுடன் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
- அடிப்படை வசதிகள்: மக்கள் இடம்பெயரும் சந்தர்ப்பங்களில் தற்காலிக தங்கமிடங்களில் உணவு, சுகாதார மற்றும் நீர் வசதிகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
- சாலைத் தடைகள்: வீதிகளில் ஏற்படும் தடைகளை விரைவாக அகற்றுவதற்குத் துறைசார் திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டது.
- அரசுசாரா நிறுவனங்கள்: இக்கட்டத்தில் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கு அரசுசாரா நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்திருந்தன.
- நீர் பாசனம்: மழைக்காலங்களில் குளங்களில் ஏற்படும் மேலதிக நீர் வெளியேற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரித்து நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்பாசனத் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டனர்.



பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri