வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)

Jaffna Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Ashik Aug 24, 2022 06:55 AM GMT
Report

வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும், படையினரும் கையகப்படுத்தியுள்ளதனால் மக்கள் இடம்பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றதாகவும், அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிக்க இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் “வடமாகாண காணி அபகரிக்கப்பட்டோரின் குரல்” எனும் தொனிப்பொருளில் நேற்று மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வருகை தந்துள்ள பிரதிநிதிகளின்  கருத்துக்கள்

இதன்போது, வடக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களையும் உள்ளடக்கி வருகை தந்திருந்த பிரதிநிதிகள் தமது மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள காணி அபகரிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

"இதற்கமைய அரசாங்கம், படையினர், வனவள தொல்பொருள் திணைக்களம் போன்றவர்கள் மக்களின் காணிகளை அபகரிப்பு செய்துள்ளனர்.

கடந்த1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கத்தால் திட்டமிட்டு நாம் வெளியேற்றப்பட்டோம், எமது கிராமங்களை பாதுகாப்பு வலயமாக இந்த அரசாங்கம் உருவாக்கி உள்ளது.

மேலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்ற செய்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் இந்த குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச அரசாங்கம் மீதான குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

எமது விளை நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. சிங்கள அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ஒரே குடையின் கீழ் ஒரே நாட்டில் ஒரு ஆட்சியின் கீழ் ஒரு தாய் மக்கள் போல் வாழ்வதாக ராஜபக்ச அரசாங்கம் கூறி வந்தது.

இந்த நிலையில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழர்களை ஓரங்கட்டியுள்ளனர்.

வடமாகாணத்தில் காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos) | Discussion On Land Grabbing In Northern Province

இந்த புறக்கணிப்பு எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே சிங்கள மக்கள், சிங்கள அரசாங்கம் என்று கூறுகின்ற போது வெறுப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த நிலை மாற வேண்டும். சிங்கள அரசாங்கம் தமிழர்களையும் மனிதராக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் தமது காணியை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் கிராம மட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US