பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444 ஏக்கர் காலணிகள் ஏற்கனவே பொதுமக்களின் காணிகள் 1985 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri