கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (14-07-2026) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பத்துக் குளங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

